Reality, Ability, Genuine, Unity — உண்மை, ஆற்றல், நேர்மை, ஒற்றுமை.

கொத்மலை வேவண்டனில் 57 குடும்பங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற நடவடிக்கை

கொத்மலை, வேவண்டனில் 57 குடும்பங்களை வலுக்கட்டயமாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டி.பி.ஜி.குமாரசிரி வெள்ளிக்கிழமை (31) தெரிவித்தார்.

மேற்படி பிரதேச மக்களுக்கு பலமுறை அறிவித்தல்கள் விடுத்தும் அவர்கள் அவ்விடத்திலிருந்து வெளியேறவில்லை. இந்நிலையில், இவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். அனர்த்தங்களில் இவர்கள் சிக்கிக்கொள்ளும் நாங்கள் இவர்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு மேலிடத்திலிருந்து எழுகிறது. இந்நிலையிலே இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம்’ என அவர் மேலும் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று முதல் பெய்த கடும் மலைக்காரணமாக 251 குடும்பங்கள் இதுவரை வெளியேற்றம செய்யப்பட்டுள்ளனர்.

31

10 2014

மலையக மண்சரிவில் சடலங்கள் மீட்பு

மண் சரிவால் பாதிக்கப்பட்ட ஹல்துமுல்லு – மீரயாபெத்த பகுதிகளில் மீட்புப் பணிகள் இன்று காலை தொடக்கம் மீளவும் ஆரம்பமாகின. நேற்றைய தினம் நிலவிய காலநிலை சீர்கேட்டால் மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்று 6 சடலங்கள் மீட்கப்பட்டிருந்தன.

இன்று காலையில 4 சடலங்கள் மீட்கப்பட்டன எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை மீட்புப் பணிகளில் 700 இராணுவத்தினர் ஈடுபட்டிருக்கின்றனர் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். நேற்றுக்காலை இடம்பெற்ற இந்த மண்சரிவினால் 100 ஏக்கர் நிலப்பரப்பு சரிவடைந்தது. இதனால் 120 வீடுகள் மண்ணால் மூடப்பட்டன. 300 இற்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர் என்பது குறிப்பிடத்தக்கது.Koslanda-Arme-16 Koslanda-Arme-11Koslanda-Arme-12 Koslanda-Arme-10 Koslanda-Arme-09 Koslanda-Arme-08 Koslanda-Arme-03 Koslanda-Arme-04 Koslanda-Arme-05 Koslanda-Arme-06 Koslanda-Arme-07

31

10 2014

செல்வச் சந்நிதியான் ஆலயத்தில் சூரனை வதம் செய்தார் முருகப்பெருமான்:

IMG_5990வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்.தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த கந்தசஷ்டித் திருவிழாவின் 06 ஆம் நாள் உற்சவத்தின் சூரசங்காரத் திருவிழா இன்று புதன்கிழமை (29.10.2014) மாலை சிறப்பாக இடம்பெற்றது.பிற்பகல் 05.45 மணியளவில் ஆறுமுகப் பெருமான் வடிவேல் தாங்கியவாறு சூரபத்மனை வதம் செய்வதற்காகச் சிறிய இரதம் ஒன்றில் திருவீதி வலம் வந்தார்.IMG_5999IMG_6003

ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ பவனி வந்த ஆறுமுகப் பெருமான் சூரனைச் சங்காரம் செய்து வெற்றிக் கொடியை நிலைநாட்டிய பின் மீண்டும் இரவு 07.30 மணியளவில் இருப்பிடம் சென்றடைந்தார்.

29

10 2014

பதுளை விரைந்த தொண்டமான்

கொஸ்லாந்தை மண்சரிவில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நேரில் விஜயம் செய்ய அமைச்சர் தொண்டமான் பதுளைக்கு விரைந்துள்ளார்.

விமானப்படையின் விசேட பெல்ரக விமானமொன்றில் அவர் கொழும்பிலிருந்து பதுளைக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பயணித்த ஹெலிகொப்டர் முதலில் கொட்டகலையில் தரையிறக்கப்பட்டது.

பின்னர் மீண்டும் ஹல்தும்முல்லையில் தரையிறக்க முற்பட்டபோது மோசமான வானிலை நிலவியுள்ளது.

இதன் காரணமாக விசேட செயற்பாட்டு அதிகாரியான அனர்த்த முகாமைத்துவ அதிகாரி ஹெலிகொப்டர் தரையிறங்க இடமளிக்கவில்லை என்று தெரியவருகின்றது.

சீரான வானிலை தொடர்பான தகவல் கிடைக்கும் வரை ஹெலிகொப்டரை நுவரெலியாவில் காத்திருப்பில் வைக்குமாறு அவர் விமானப்படைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதன் காரணமாக அமைச்சர் தொண்டமானின் ஹல்தும்முல்லை பயணம் தற்போது தடைப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

-

29

10 2014

ஏவும் போது வெடித்துச் சிதறிய நாஸா ரொக்கெட்! விஞ்ஞானிகள் அதிர்ச்சி

சர்வதேச விண்வௌி ஆய்வக மையகத்திற்கு தேவையான பொருட்களை கொண்டு செல்வதற்காக வெர்ஜினியா ஏவுகளத்திலிருந்து நாசா ஆளில்லா ரொக்கெட்டை விண்வௌிக்கு அனுப்பியது.

ரொக்கெட் புறப்பட்ட சிறிது நிமிடங்களில் அதுவெடித்து சிதறியது. இது குறித்து தீவிர விசாரணைக்கு நாசா உத்தரவிட்டது.screen-shot-2014-10-28-at-6-37-29-pm

இது குறித்து பத்திரிகையாளர்கள் கூட்டத்தை கூட்டவும் உத்தரவிட்டுள்ளது

29

10 2014

பத்து லயன் வீட்டுத் தொகுதிகள் மண்ணில்

ஹல்துமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மண் சரிவில் சிக்குண்ட 300 பேரைக் காணவில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 600 பேர் வரை புதையுண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை 30 க்கும் அதிகமான சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் காணால் போன 300 பேரும் உயிழந்திருக்கலாம் எனவும் அரச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் உயிரிழந்தவர்களின் முழுமையான விபரங்களை வெளியிட அரசாங்கம் தயக்கம் காண்பிப்பதாக தெரிவிக்கப்படுகின்றதுமண்ணில் புதையுண்டவர்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.badulla (12) இராணுவத்தினரும் காவல்துறையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதிகாலை நேரம் என்பதனால் அதிகமானவர்கள் இந்த மண் சரிவினால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகளில் ஒரு சில சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. சுமார் ஐந்து கிலோ மீற்றர் அளவிற்கு மண் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் சுமார் பத்து லயன் வீட்டுத் தொகுதிகள் மண்ணில் புதையுண்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.badulla (14)

29

10 2014

குடிநீரில் மனித மலம்: 2வகை போத்தல்களுக்கு அதிரடித் தடை!

நுகர்வோருக்கு விநியோகிக்கப்படும், போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீரில் மனித மலம் கலந்துள்ளமை கண்டு பிடிக்கப்பட்டமையால், இரு வகையான நாமங்களை கொண்ட குடிநீர் போத்தல்களுக்கு, நீதிமன்றம்; தடைவிதித்துள்ளது.Drinking-Woter

மாளிகாகந்த மேலதிக நீதவான் ரஷந்த கொடவெலவே, நேற்று செவ்வாய்க்கிழமை இவ்வாறு தடைவிதித்துள்ளார். கிரிஸ்டல் (cristal) மற்றும் கே சொய்ஸ் (K Choice) ஆகிய வர்த்தக நாமங்களை கொண்ட குடிநீர் போத்தல்களுக்கே இவ்வாறு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

29

10 2014

யாழ் குளியலறையில் ஐஸ்கிறீம் நிலையம்!

யாழ் நகர்ப்பகுதியில் மிகவும் சுகாதாரச் சீர்கேடான முறையில் இயங்கி வந்த ஜுஸ் உற்பத்தி நிலையம் யாழ் நீதிமன்றினால் சீல் வைத்து மூடப்பட்டது.

அண்மையில் இவ்வுற்பத்தி நிலையத்தினை சுற்றிவளைத்த சுகாதாரத் திணைக்களத்தின் விசேட குழுவினர் இங்கு மிகவும் சுகாதாரச் சீர்கேடான முறையில் ஜுஸ் உற்பத்தி நடைபெறுவதைக் கண்டுபிடித்தனர்.

சிறிய வீடு ஒன்றில் தொலைத்தொடர்பு நிலையம், புகைப்பட நிலையம் என்பவற்றுடன் குளியலறையில் ஜுஸ் உற்பத்தியும் நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டது.

அசுத்தமான நீரில் மருத்துவச் சான்றிதழ் எதுவும் பெறப்படாமல் உற்பத்தி நடைபெற்று வந்துள்ளது.223-337x600

29

10 2014

மாட்டுத் தலை மிரட்டல்

Cow-Head

இரண்டு மாடுகளின் வெட்டப்பட்ட தலைகளுக்கருகில் எச்சரிக்கை என தலைப்பிடப்பட்ட பதாதைகள் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவையடி சந்தியில் புதன்கிழமை(29) காலை மீட்கப்பட்டுள்ளன.

‘எங்கள் காணிக்குள் இருந்து மாடுகளை வெளியேற்றாவிட்டால் அதற்கு ஏற்படும் நிலைமைதான் உங்களுக்கும் நடக்கும்’ என அப்பதாதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அம்பாறை, வட்டைமடு காணிப்பிரச்சிணை தொடர்பான விசாரணை பொத்துவில் நீதிமன்றத்தில் இன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

29

10 2014

திருகோணமலையில் ஜனாதிபதி மஹிந்த

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு திருகோணமலை மாவட்டத்திற்கு இன்று செவ்வாய்க்கிழமை விஜயம் செய்கிறார். திருகோணமலை மாவட்டத்தின் மூதூர், திருகோணமலை மற்றும் சேருவில ஆகிய தேர்தல் தொகுதிகளில் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பல அபிவிருத்தி பணிகளை பொது மக்களிடம் கையளிக்கவுள்ளார்.

மூதூர் தொகுதிக் குட்பட்ட பிரதேசங்களில் நிறைவு செய்யப்பட்ட தம்பலகாமம் பிரதேச சபையின் புதிய அலுவலக கட்டடம், மூதூர் பாரிய குடிநீர் விநியோக சுத்திகரிப்பு நிலையம், கிண்ணியா அல்-அக்ஷா கல்லூரி, முள்ளிப்பொத்தானை அல் – ஹிஜ்ரா மகா வித்தியாலயம், முள்ளிப்பொத்தானை சிங்கள மகா வித்தியாலயம் ஆகியவற்றில் நிர்மாணிக்கப்பட்ட மஹிந்தோதய தொழில்நுட்ப ஆய்வு கூடங்களையும், சேருவில தொகுதிக்குட்பட்ட கந்தளாய் அல்-தாரிக் மகா வித்தியாலயம், கந்தளாய் சிங்கள மகா வித்தியாலயத்திலும் நிர்மாணிக்கப்பட்ட மஹிந்தோதய தொழில்நுட்ப ஆய்வு DSCN0548DSCN0526கூடங்களையும் ஜனாதிபதி கையளிக்கவுள்ளார்.

நாளை புதன் கிழமை திருகோணமலை தொகுதிக்குட்பட்ட திருகோணமலை பிராந்திய மக்கள் வங்கிக் கட்டடம், குச்சவெளி பிரதேச சபையின் புதிய அலுவலக கட்டடம், திருகோணமலை விபுலானந்தா கல்லூரி, பதவி ஸ்ரீபுர பளுகஸ்வெவ சிங்கள மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப் பட்ட மஹிந்தோதய தொழில்நுட்ப ஆய்வு கூடங்களையும் ஜனாதிபதி பொது மக்களிடம் கையளிக்க வுள்ளார்.

இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத், கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, நீர்வளங்கள் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்தன உள்ளூராட்சி மாகாண சபை அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜய விக்கிரம, பிரதி அமைச்சர்களான எம்.கே.டி.எஸ். குணவர்தன, சுசந்த புஞ்சி நிலமே, கிழக்கு மாகாண அமைச்சர்கள், தவிசாளர் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளார்கள்.

 

28

10 2014