About Us
அமரர் குமாரசாமி நந்தகோபன் (ரகு) அவர்களின் 2ம் ஆண்டு நினைவு நாளை(14.11.2010) ஒட்டி அவர்களுக்கு சமர்ப்பணம் செய்கின்றோம். மேலும் எமது தாயகத்தின் தாகங்களையும் ஏக்கங்களையும் எதிர்பார்ப்புக்களையும் வெளிக்கொணரமுயல்வதுடன் மறைக்கப்படும் எமது வரலாற்றினை எமது எதிர் காலச் சந்ததியினர்க்கு கடத்தும் உண்மையான ஓர் ஊடகமாகவும் குளக்கோட்டன் .கொம் விளங்கும் என உறுதி செய்கின்றோம்.
சுய அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் எமது மக்களின் எதிர்கால விடியலுக்கான களப்பாதையாக இதனைப் பயன்படுத்துமாறு அனைத்து உலகத்தமிழ் நெஞ்சங்களையும் வேண்டுகின்றோம். அமரர் குமாரசாமி நந்தகோபன் அவர்கள் அரசியல் வாழ்வுக்காய் தனக்குப் பொருத்திக்கொண்ட ‘ரகு” எனும் விழுமிய நாமத்தை தனது வாழ்வியலாகக் கொண்டு ஒழுகினார்.
அவர் ஒழுகிய உண்மை (Reality) ஆற்றல் (Ability) நேர்மை (Genuine) ஒற்றுமை (Unity) என்பவற்றை எமது மக்களின் விடுதலைக்கான விழுமியமாகவும் எமது இணையத்தின் விழுமியமாகவும் கொண்டு ஒழுகுவோம்.