Reality, Ability, Genuine, Unity — உண்மை, ஆற்றல், நேர்மை, ஒற்றுமை.

Archive for February 23rd, 2012

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்திற்கு பிரித்தானியாவும் ஆதரவு!

இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தீர்மானத்தை, பிரித்தானியாவும் ஆதரிக்க வாய்ப்புகள் உள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட் தெரிவித்துள்ளார்.பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற “சிறிலங்காவின் மனித உரிமைகள்“ என்ற தலைப்பிலான விவாதத்தின் முடிவில் பதிலளித்து பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வருவதற்கான தீர்மானம் ஒன்றை அமெரிக்கா தயாரித்து வரும் தீர்மானத்திற்கு நாம் ஆதரவு வழங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று அலிஸ்ரெயர் பேர்ட் தெரிவித்துள்ளார்

23

02 2012

ஐ.நா. மனித உரிமை பேரவை அமர்வுகளில் ஐந்து நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக உறுதி

எதிர்வரும் 27ம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமை பேரவை அமர்வுகளின் போது இதுவரை ஐந்து நாடுகள் மட்டுமே இலங்கைக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளன.சீனா, ரஸ்யா, கியூபா, பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளே இவ்வாறு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளன.

26 அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைக்க தயாராகி வருவதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் சமர்ப்பிக்குமாறு சில நாடுகள் விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

23

02 2012

கிழக்கு மாகாண சபை அமர்வு எதிர்வரும் 27ந் திகதி.

எதிர்வரும் 28ந் திகதி இடம்பெறவிருந்த கிழக்கு மாகாண சபை அமர்வானது ஒரு நாள் முந்தியே(27.02.2012) கூட இருப்பதாக மாகாண சபையின் தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸ் தெரிவித்துள்ளார். தற்போது மாகாண சபைகளின் ஒப்பதலுக்காக அனுப்பப்பட்டுள்ள நாடு நகரத்தி திருத்தச் சட்டமூலம் கடந்த 13.02.2012ந் கிழக்கு மாகாண சபையின் அங்கிகாரத்திற்கு சமர்ப்பித்த போது அதில் குறிப்பிட்ட சில மாற்றங்களை செய்து தரும்படி திரும்ப அனுப்பட்டிருந்தது. அப்போது எதிர்வரும் சபை அமர்வு 28.02.2012 அன்று கூடும் எனவும் தவிசாளர் பாயிஸ் அவர்கள் தெரிவித்திருந்தாh. ஆனால் தற்போது ஒருநாள் முந்தி கூடப்படவுள்ள கிழக்கு மாகாண சபை அமர்வில் திருத்தங்களளுடன் கூடிய நாடு நகரத்திருத்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

23

02 2012

தரிசனம்கொடி வாரம்-2012.

தரிசனம் விழப்புலனற்றோர் தேசிய கொடிவாரம் தற்போது அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. மட்டக்களப்பு விழிப்புலனற்றோர் பாடசாலை இதனை வருடாவருடம் அனுஸ்டிப்பது வழமை. இம் முறை மட்டக்களப்பு மாவட்டத்திலே (22.02.2012) கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களுகு;கு முதலாவது கொடி அணிவிக்கப்பட்டு உத்தியோக பூர்வமாக இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் மட்டக்களப்பு விழப்புலனற்றோர் பாடசாலையின் நிருவாகிகள் மற்றும் அங்குள்ள மாணவர்களும் இதில் கலந்து கொண்டார்கள்.

23

02 2012

பெண்ணின் கற்பைச் சூறையாடிய மூன்று காமுகர்கள் கை து

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கைப் பணிப்பெண் ஒருவரின் கற்பை சூறையாடி, அவர் பணிபுரிந்த வீட்டில் இருந்த பெறுமதியான பொருட்களை திருடிச் சென்ற மூன்று சந்தேகநபர்களை சார்ஜா பொலிஸார் கைது செய்துள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

ஐக்கிய அரபு இராச்சியத்தில், இலங்கைப் பெண் பணிபுரியும் வீட்டில் தனியாக இருந்த வேளை, 19 மற்றும் 21 வயதிற்கு இடைப்பட்ட மூன்று இளைஞர்கள் குறித்த வீட்டில் திடீரென நுழைந்துள்ளனர்.

இவர்களில் ஒருவர் வீட்டில் இருந்த பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுள்ளதோடு மேலும் இருவர் தனிமையில் இருந்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தை அடுத்து வீட்டிற்கு வந்த வீட்டு உரிமையாளர் இலங்கைப் பெண்ணின் நிலையை கண்டும் சம்பவத்தை நினைத்தும் அதிர்ந்து போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அவள் அழுது கொண்டே இருந்தாள், அவளை சமாதானப்படுத்த எனக்கு நீண்ட நேரம் சென்றது. ´மூன்று இளைஞர்கள் வீட்டினுள் நுழைந்து என்னை கற்பழித்தனர்´ என அப்பெண் என்னிடம் கூறினாள்” என வீட்டு உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து அவர் சம்பவம் தொடர்பில் உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளார். சார்ஜா பொலிஸ் மற்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விரைந்து செயற்பட்டு மூன்று சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

23

02 2012

பெப்ரவரி 27 ஆம் திகதி முதல் மார்ச் 21 ஆம் திகதிவரை இலங்கையில் சனத்தொகை கணக்கெடுப்பு! சரியான தகவல் வழங்குமாறு கோரிக்கை

இலங்கையில் பெப்ரவரி 27 ஆம் திகதி முதல் மார்ச் 21 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள சனத்தொகை கணக்கெடுப்பில், தாம் கணக்கெடுக்கப்படுவதை மக்கள் உறுதிசெய்ய வேண்டுமென தொகைமதிப்பு, புள்ளிவிபரத் திணைக்களம் மக்களிடம் கோரியுள்ளது.சகல பிரஜைகளும் சரியான தகவல்களை வழங்குவதும். மக்கள் வழங்கிய தகவல்களை திணைக்கள ஊழியர்கள் இரகசியமாக வைத்திருப்பதும் சட்டப்படி கட்டாயமானதாகும் என திணைக்களப் பணிப்பாளர் நாயகம் டி.பீ.பி. வித்தியாரட்ன தெரிவித்துள்ளார்.

வீடுகளுக்கு வரும் கணக்கெடுப்பு உத்தியோகஸ்தர்களை, திணைக்களத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, அணிந்திருக்கும் தொப்பி, அவர்கள் வைத்திருக்கும் சனத்தொகை, வீடுகள் தொகைமதிப்பு இலச்சினையுடன் கூடிய கோவை என்பவற்றின் மூலம் அடையாளம் காண முடியும் என அவர் தெரிவித்தார்.

குடியிருப்பதற்கு வீடில்லாமல் இருப்பவர்கள் மார்ச் 19 ஆம் திகதி அவர்கள் இரவில் படுத்துறங்கும் இடத்தில் வைத்து கணக்கெடுக்கப்படுவர் எனவும் இவர்கள் கணக்கெடுக்கப்பட்டவர்கள் என்பதை உறுதிசெய்யும் அடையாள அட்டையொன்றும் இவர்களுக்கு வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டை இலக்கம், பிறந்த திகதி, மாவட்டம், கல்வித் தகைமைகள், தொழிற்பயிற்சி, தொழில்வாண்மை, கணினி அறிவு, தொழில், பொருளாதார செயற்பாடுகள் பற்றிய விபரங்கள் திரட்டப்படவுள்ளதால் மக்கள இவற்றை ஆயத்தமாக வைத்திருப்பது வேலையை இலகுவாக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

23

02 2012

மேரி கொல்வின் மகத்தான ஊடகவியலாளர்.

மேரி கொல்வின் மகத்தான ஊடகவியலாளர். ஊடகத்துறைக்கு பெருமை சேர்த்தவர். அமெரிக்காவில் பிறந்தவர். பிரிட்டிஷ் சண்டே டைம்ஸ் செய்தியாளர். சிரியாவிலே சர்வாதிகாரி அசாத்தின் படைகளால் அவர் இன்று கொல்லப்பட்டுவிட்டார்

மேரி நமது நாட்டிற்கு பழக்கமானவர். எனக்கும் நன்கு அறிமுகமானவர். உலகில் எங்கெங்கு போர் நடக்கின்றதோ அங்கெல்லாம் சென்று, குண்டு வீச்சு மழைக்கு மத்தியில், பலருக்கு முடியாத, எவரும் துணியாத, பல தகவல்களை படங்களுடன் திரட்டி உலகிற்கு வழங்கிய வீரமங்கை அவர். இலங்கை போர் தொடர்பிலே துணிச்சலுடன் செயல்பட்டு ஒரு கண்ணையும் நம் நாட்டிலேயே இழந்தவர். நமது துன்பங்களை உலகறிய செய்த வீரமங்கை அவர்.

மகத்தான மனிதர்கள் சாவதில்லை. ஏனென்றால் ஆபத்து வருகின்றது என்று அறிந்த நிலையிலும் தாம் வகுத்துக்கொண்ட பாதையில் துணிச்சலுடன் செயல்படுபவர்கள்தான் மகத்தான மனிதர்கள்.

மேரி கொல்வினும் ஆபத்து மிக்க தனது தொழிலில் ஒரு நாள் சாவு வரும் என்று அறிந்தே இருந்தார். ஆகவே அவர் சாகவில்லை. மகத்தான மனிதர்களுக்கு மரணம் கிடையாது. அவர்கள் நாமம் வாழும். அவர்களது சாதனைகள் வாழ்ந்துகொண்டே இருக்கும்.

எதிர்காலத்தில் தோன்றபோகும் எத்தனையோ இளம் ஆண்-பெண் ஊடகவியலாளர்களின் ஊடாக மேரி வாழ்வார். உலகம் உள்ளவரை வாழ்வார்.2001ஆம் ஆண்டில் இலங்கையின் வடக்கில் இடம்பெற்ற மோதலில் மேரி கொல்வின் தனது கண்களில் ஒன்றை இழந்தார்.

23

02 2012